திருச்சி புது காட்டூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் ராம்ஜி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பாரத் பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த புது காட்டூரை சேர்ந்த சசிதரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.