புதுக்கோட்டை அன்னவாசலைச் சேர்ந்த 19 வயது யாசர்அராபத், திருச்சி காந்திமார்க்கெட் பள்ளிவாசல் அருகே வீடு கட்டி வருகிறார். வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரிக்கல் வயர்களை அங்கு வைத்துவிட்டுச் சென்றபோது, மர்ம நபர் அவற்றைத் திருடிச் சென்றார். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி, வரகனேரியைச் சேர்ந்த 21 வயது அப்துல்ரஜாக் என்பவரைக் கைது செய்து, வயர்களை மீட்டனர்.