திருச்சி: போலி ஆவணங்கள் - சிங்கப்பூரிலிருந்து வந்தவா் கைது

2பார்த்தது
திருச்சி: போலி ஆவணங்கள் - சிங்கப்பூரிலிருந்து வந்தவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த அ. பெரியகருப்பன் (48), சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி கோமதி அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸார் பெரியகருப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you