திருச்சி கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

4பார்த்தது
திருச்சி கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி மாவட்டம் மணக்கால் கிராமத்தில் ரவீந்திர குமார் என்பவரை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக கமலேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கமலேஷின் தொடர் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.