திருச்சி: காசோலை மோசடி வழக்கில் ஒரு ஆண்டு சிறை

3பார்த்தது
திருச்சி: காசோலை மோசடி வழக்கில் ஒரு ஆண்டு சிறை
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த பூபதிக்கு, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜியோர் ஜியுஸ் ராஜாமணி என்பவர் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி, வங்கி காசோலை வழங்கியுள்ளார். பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததை அடுத்து, பூபதி வழக்கு தொடர்ந்தார். மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஜியோர் ஜியுஸ் ராஜாமணிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு மாதத்திற்குள் ரூ. 10 லட்சத்தை வழங்க வேண்டும், இல்லையேல் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இது பண மோசடி தொடர்பான வழக்கு.

தொடர்புடைய செய்தி