திருச்சி: ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் ஆவேசம்

10பார்த்தது
திருச்சி அரியமங்கலம் ரயில்வே தண்டவாளம் அருகே, பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த பாதையில் ரயில்வே நிர்வாகம் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவோடு இரவாக அனைவரும் சேர்ந்து தோண்டப்பட்ட பள்ளத்தினை மண்ணைக் கொட்டி மூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.