திருச்சி மாவட்டம் திருவரம்பூர் துவாக்குடி பிஹெச்எல் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த துவாக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஹரிகரன் என்பவர் திருவெறும்பூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஹரிகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நகரத்தினம் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிறையில் உள்ள ஹரிகரனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.