திருச்சி பெரிய மிளகு பாறை புதுத்தெரு பகுதியில் கடந்த பத்தாம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.