அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக தவெகவில் சேர்ந்தார்.
அரசியல் வட்டாரங்களில் இந்த இணைவு கவனம் பெற்றுள்ளது. நடராஜன் தவெகவில் இணைந்தார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த நடராஜன், சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இணைந்திருந்தார். அதிமுகவில் இருந்து தொடர்ந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.