திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன்-செல்வி தம்பதியினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த செல்வி நேற்று (மே 29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.