பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் மூலவர் நம் பெருமாள், ரங்கநாயகி தாயார், ராமானுஜர் சன்னதிகளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் மரியாதை செய்தனர்.