
திருச்சி: மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
திருச்சியைச் சேர்ந்த 17 வயது பி.பி.ஏ. மாணவி ஒருவரை காதலித்த சக்தி (27) என்ற வாலிபர், மாணவியை சமயபுரம் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் சக்தி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் கண்டிப்பிற்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.







































