திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன் காண்ட்ராக்டர் ஆன இவர் தனது வீட்டை விஸ்தரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் கடந்த 23ஆம் தேதி அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராக்களை உடைத்து லேப்டாப் எலக்ட்ரிக் சைக்கிள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மர்மநபர்கள் திருடி சென்றனர் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாழவந்தான்கோட்டை இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கைது செய்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அமீர் என்ற குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.