திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் மகாலட்சுமி, வான்மதி ஆகியோர் ஸ்கூட்டரில் நம்பர் ஒன் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதாவின் வாகனம் ஸ்கூட்டி மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.