திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அதிகாரம் கரியாம்பட்டி சாலையில் நேற்று இரவு பொதுமக்கள் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு சாலையோரம் இருந்ததைக் கண்டு பீதியடைந்தனர். உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பாம்பு பிடிப்பான் உதவியுடன் பாம்பை பத்திரமாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை அருகிலுள்ள காப்பு காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர்.