திருச்சி டீக்கடைக்குள் புகுந்த கார் ஒருவர் உடல் நசுங்கி பலி

3பார்த்தது
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் உள்ள முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையில், சென்னையை நோக்கிச் சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இதில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, காரின் மோதலால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.