முசிறி அருகே ஊருடையாபட்டியைச் சேர்ந்த குணசேகரன், காருகுடி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் மதிவாணன் ஆகியோருடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவு நடந்த இந்தத் தகராறில், ஆத்திரமடைந்த ஹரிஷ் அரிவாளால் தாக்கியதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தா. பேட்டை போலீசார் ஹரிஷ் மற்றும் மதிவாணன் மீது வழக்குப்பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.