திருச்சி மணல் எடுப்பது குறித்து கலெக்டர் அறிவிப்பு

393பார்த்தது
திருச்சி மணல் எடுப்பது குறித்து கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள 186 ஏரி குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் மற்றும் சாதாரண மண்ணை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக வெட்டி எடுத்துச் செல்லலாம். இதற்காக www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, வட்டாட்சியரின் அனுமதி பெற்று அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் மணல் எடுத்துச் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி