திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு

756பார்த்தது
திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஷீலா நகரைச் சேர்ந்த சின்னையா (60) என்பவர் செட்டிப்பட்டி கொம்பை வாய்க்கால் பகுதியில் சென்றபோது மர்மப் பூச்சி கடித்ததில் வாயில் நுரை தள்ளியுள்ளது. ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி