மணப்பாறை அருகே அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை, 2017 ஆம் ஆண்டு கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பாப்பம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், சிவா, கேசவன், பிரகாஷ் ஆகியோர் கல்லால் அடித்து கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பான வழக்கில், நீதிபதி ராஜசேகர் குற்றவாளிகள் நால்வருக்கும் ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.