திருச்சி திருவெறும்பூர் வாரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துலட்சுமியை நகைக்காக அடித்து கொலை செய்து முட்புதரில் வீசிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். இந்த தண்டனையை மதுரை ஹைகோர்ட் கிளை உறுதி செய்துள்ளது. ரேவதி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஆயுள் தண்டனையை மாற்றி அமைக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.