கார் மோதி விபத்து.. கணவன் மனைவி காயம்

1062பார்த்தது
துறையூர் அருகே உள்ள மருவத்தூரை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் தனது மனைவி சுமித்ராவுடன் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எரகுடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடைய இருசக்கர வாகனம் எரகுடி அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த தர்மராஜ் தலைப்பகுதியிலும் மனைவி சுமித்ரா தலை மற்றும் கால் பகுதியிலும் காயம் அடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கோனேரிப்பட்டியை சேர்ந்த கோகுல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி