திருச்சி மாநகர் மாவட்ட அ. தி. மு. க. வின் புதிய அலுவலகம் தில்லைநகரில் இன்று திறக்கப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் சி. கார்த்திகேயன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார். மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம் ஆகியோர் இணைந்து புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த அலுவலகம் 5-வது குறுக்கு வீதியில், கி. ஆ. பெ. பள்ளி பின்புறம் அமைந்துள்ளது.