திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெத்துப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விளைந்த 100 டன்னுக்கு அதிகமான நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படாததால், இப்பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரஸ் கூட்டமைப்பினர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.