திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இறைச்சி வியாபாரிகள் கோழி, ஆடு, மீன் கழிவுகளை கொட்டி செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.