துவரங்குறிச்சி அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

418பார்த்தது
துவரங்குறிச்சி அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
திருச்சி மாவட்டம் துரங்குறிச்சி, நத்தம், மணப்பாறை அணுகு சாலையில் மருத்துவக் கழிவுகள், மாத்திரைகள், சிரஞ்சுகள் போன்றவை அதிக அளவில் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதிகளில் அடிக்கடி இது போன்ற மருத்துவ மற்றும் கால்நடை கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.