திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை

788பார்த்தது
திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வெங்கடேஷ்பெருமாள், பிப்ரவரி 7ஆம் தேதி அதிக மாத்திரைகள் உட்கொண்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி