திருச்சி உறையூர் முதல் கரூர் புறவழிச்சாலை வரை உயங்கொண்டான் ஆறு கிழக்குக்கரை பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, கோணக்கரை மயானம் முதல் குடமுரட்டி சாலை வரை நவம்பர் 5ஆம் தேதி முதல் தற்காலிகமாக சாலை மூடப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவித்துள்ளார். மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.