திருச்சி வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணசீலம் கே இ எஸ் மஹால் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5000 ரூபாய் ரொக்கம் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.