தஞ்சாவூா் மாவட்ட கைதி வடிவேல் (30), முருகானந்தம் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை காலை தோட்ட வேலைக்காக சிறையிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட இருவரும் மாலையில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து கே.கே. நகா் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் புகாரளித்தனா். சனிக்கிழமை குட்ஷெட் கீழே பதுங்கியிருந்த வடிவேலுவை சிறைத்துறை போலீஸாா் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனா். தப்பிய மற்றொரு கைதியை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.