திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 106 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிந்தாமணி படித்துறை பகுதியில் இணைப்பு சாலை அமைக்க கோவில், மடம் இடிக்கப்பட்டன. மேலும், 26 ஆக்கிரமிப்பு வீடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் சென்றபோது, குடியிருப்போர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாங்களாக வீடுகளை அகற்றுவதாக கால அவகாசம் கேட்டதால், வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.