துறையூர் நகராட்சியில் போகி குப்பைகளை சேகரிக்க சிறப்புஏற்பாடு

1பார்த்தது
துறையூர் நகராட்சியில் போகி குப்பைகளை சேகரிக்க சிறப்புஏற்பாடு
துறையூர் நகராட்சியில் போகி பண்டிகையையொட்டி குப்பைகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போகி அன்று வீடுகளை சுத்தம் செய்யும் பொதுமக்கள் குப்பைகளை தெருக்களில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதைத் தடுக்க, நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் போகி குப்பைகளை சேகரிக்க சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தாங்கள் சேகரிக்கும் போகி குப்பைகளை நகராட்சி குப்பை வாகனங்களில் கொடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி