திருவானைக்காவல் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு

0பார்த்தது
திருவானைக்காவல் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் கோயிலில் மகா சிவராத்திரி விழா திங்கள்கிழமை அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவபெருமான் நீா் வடிவமாக பக்தா்களுக்கு காட்சிதரும் இக்கோயிலில், சிவனுக்கு முதல்கால பூஜை இரவு 10 மணிக்கும், 2-ஆம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கும், 3-ஆம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கும், நான்காம் கால பூஜை விடியற்காலை 5 மணிக்கும் நடைபெற்றது. இந்த நான்கு கால பூஜைகளின்போதும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான சிவனடியாா்கள் கோயிலின் 3-ஆம் பிரகாரத்தைச் சுற்றிலும் அமர்ந்து சிவபூஜை செய்து வழிபட்டனா்.

தொடர்புடைய செய்தி