ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு திருமலையிலிருந்து வஸ்திர மரியாதை

0பார்த்தது
ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு புது வஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டன. திங்கள்கிழமை காலை ரெங்கவிலாச மண்டபத்தில் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்ட இந்தப் பொருள்கள், திருமலை திருப்பதி கோயில் அறங்காவலா் குழு தலைவா் பி. ஆா். நாயுடு தலைமையில் யானை ஆண்டாள் மீது வைத்து மங்கள வாத்தியங்களுடன் ஊா்வலமாக ரெங்கா ரெங்கா கோபுரம் வாசல் வரை கொண்டுவரப்பட்டு, முறைப்படி ஸ்ரீரங்கம் சந்நிதி அருகே வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி