திருச்சி: பேருந்து மோதி சப் இன்ஸ்பெக்டர் பலி

84பார்த்தது
திருச்சி: பேருந்து மோதி சப் இன்ஸ்பெக்டர் பலி
திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் பேட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் எஸ்ஐ பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பேட்டவாய்த்தலை திருவள்ளுவர் நகர் அருகே திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலை விபத்து ஏற்பட்டதாக காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது. தகவலின் பேரில் எஸ்.ஐ செந்தில்குமார் விரைந்து சென்று அங்கு விபத்தில் சிக்கிய மூன்று பேரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்பு எஸ்ஐ சாலையைக் கடக்க முயன்றபோது கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி