தமிழ்நாடு மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பாமல் ஒப்பந்ததாரர் மூலம் ஆள் எடுக்கும் வழிகாட்டி நெறிகளை கைவிட வேண்டும். மேலும், ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிந்த 23 மாதங்கள் கடந்த பிறகும் ஊதிய உயர்வு கிடைக்குமா என்ற நிலைக்கு தீர்வு காண வேண்டும், ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று செவ்வாய் தென்னூரில் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் வாயிற்கூட்டம் நடைபெற்றது.