துறையூர்: சமத்துவபுரம் காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்

1பார்த்தது
துறையூர் அருகே தளுகை ஊராட்சியில் புதிதாக 100 வீடுகளுடன் கட்டப்பட்ட சமத்துவபுரத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சமத்துவபுரத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உப்பிலிபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வம், அசோகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், பழனிச்சாமி, ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி