திருச்சி: ஸ்டிக்கர் ஒட்டி‌அதிமுகவினா் நூதன பிரசாரம்

71பார்த்தது
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் நூதன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு நபர் மறைக்கப்படுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்நிலையில், 'யார் அந்த சார்?' என்ற வாசகத்துடன் கூடிய வில்லைகளை வாகனங்களில் ஒட்டி அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை நூதன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. திருச்சி புகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், பேட்டவாய்த்தலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான மு. பரஞ்சோதி தலைமை வகித்தார். 

அமைப்புச் செயலர்கள் ஆர். மனோகரன், எஸ். வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில், அதிமுகவினர் மற்றும் ஆதரவாளர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு மீது 'யார் அந்த சார்?' என்ற வாசகத்துடனான ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன. கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி