திருச்சி போலி பாஸ்போட்டில் பறக்க முயன்றவர் கைது

62பார்த்தது
திருச்சி போலி பாஸ்போட்டில் பறக்க முயன்றவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் அகமது ஜலாலுதீன் இவர் நேற்று (ஜனவரி 2) கோலாளம்பூர் செல்வதற்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் ஜலாலுதீன் போலீஸ் ஆவணங்களை சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் முகவரி மாற்றிக் கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. 

இது தொடர்பாக இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஜலாலுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you