தமிழக முதல்வர்
விஜய் இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், காலை முதலே
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவாணைக்கோவில் வழியாக வரும் பேருந்துகள் மாம்பழச்சாலையில் நிறுத்தப்பட்டு, பயணிகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வெயிலில் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாம்பழ சாலை முதல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறமும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.