திருச்சி: திமுகவினர் அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள் - தினகரன்

79பார்த்தது
திருச்சி: திமுகவினர் அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள் - தினகரன்
திருச்சி திருவரங்கம் சட்டமன்ற தொகுதி அ. ம. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ. ம. மு. க பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன்னதாக டி. டி. வி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: - செந்தில் பாலாஜி வழக்கில் அவர் அம்பு தான். அதை எய்தவர்கள் மாட்டிக்கொள்ள கூடாது என அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். திமுக வினர் மக்களை ஏமாற்றியவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள். மக்கள் தான் அதற்கு தக்க பதிலடி தர வேண்டும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த முரண்பாடும் இல்லை என பேசினார்.

தொடர்புடைய செய்தி