திருச்சி: பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பஸ் மோதி பலி

344பார்த்தது
திருச்சி: பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பஸ் மோதி பலி
புதுக்கோட்டை மாவட்டம், களமாவூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் தனது அம்மா செல்லம்மாளுடன் இரு சக்கர வாகனத்தில் சமயபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பெட்ரோல் பங்க் அருகே செல்லம்மாள் நிலைதவறி கீழே விழுந்தாா். அப்போது, அவருக்குப் பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.