திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ1500ல் இருந்து ரூ5000 ஆக உயர்த்த வேண்டும், பார்வையற்றோர்களுக்கு தொழில் கூடம் அமைத்து வேலை வாய்ப்பை தேடித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட பார்வையற்றோர், பெரியார் சிலைக்கு வாழ்வாதாரத்தை வலியுறுத்தும் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.