திருச்சி அரசு இயந்திர கலப்பை பணிமனையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான இலவச உழுவை ஓட்டுநர் வேலைவாய்ப்பு பயிற்சி இம்மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி 27 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9578817788 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தெரிவித்துள்ளார்.