திருச்சி உறையூர் சோளம் பாறை ராமலிங்க நகர் 1வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஜூன் ஒன்பதாம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.