திருச்சி: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

358பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள், ஓட்டுநர் பதிவரை எழுத்தர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி