திருச்சி: பிறந்தநாள் கொண்டாடிய திருவானைக்காவல் கோவில் யானை

50பார்த்தது
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள பெண் யானை அகிலாவுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. 24-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள யானைக்கு பக்தர்கள் பழங்கள் கொடுத்து உபசரித்தனர். இந்த சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டார். 2011 டிசம்பர் 6 அன்று அசாம் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அகிலாவுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி