திருச்சியில் வரதட்சணைக் கொடுமை: இளம்பெண் தற்கொலை

71பார்த்தது
திருச்சியில் வரதட்சணைக் கொடுமை: இளம்பெண் தற்கொலை
திருவானைக்காவல் தெப்பக்குளம் பின்புறப் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ்வரன். இவருக்கு மனைவி கீர்த்தனா (24), இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வரதட்சணை கேட்டு கீர்த்தனாவை அவரது கணவர் விக்னேஷ்வரன், மாமனார் சண்முகம், மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்தினராம். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு விக்னேஷ்வரன் மதுபோதையில் வந்து தகராறு செய்து திட்டியதைத் தொடர்ந்து கீர்த்தனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்து கீர்த்தனாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கீர்த்தனாவின் சாவுக்கு காரணமானவர்களிடம் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி