திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது முதல்வர் சந்திக்காதது குறித்து கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் கூட பிரதமர் வந்தால் முதல்வர்கள் சந்திக்க வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழக முதல்வருக்கு கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வரக்கூடாது என்ற எண்ணம் உள்ளதாகவும், மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் நாலேட்ஜ் இல்லை என்றும், தமிழகத்தில் அதிக போலி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.