திருச்சி: மருத்துவமனை பெண் ஊழியரிடம் செயின்பறிப்பு

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் லதா இவர் திருச்சி பெரிய மிளகு பாறை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் சம்பவம் நடந்த நேற்று சக ஊழியருடன் டூவீலரில் திருச்சி மன்னார்புரம் பகுதியில் இருந்து அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் லதாவின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்றார் இது குறித்து எடமலைபட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.